Published on 28/09/2019 | Edited on 28/09/2019
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (27-09-2019) மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, தனது சொந்த ஊரான சேலத்திற்கு கார் மூலம் வருகை தந்தார்.
![edapadi k palaniswamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/swjoVs7pILFaS19LBP61438E_qoR02ubgixP3Qqxv2k/1569644194/sites/default/files/inline-images/cm%20in.jpg)
அவர் வருகையின் போது ஈரோடு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளர் கதிரவன் மற்றும் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் சித்தோடு அருகில் அவரை வரவேற்று பூங்கொத்து கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பினார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு மற்றும் நாளை தனது சொந்த ஊரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலத்திலிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
வழக்கமாக தனது சொந்த ஊரில் வந்து தங்குவது மாதத்தில் ஒரு முறை இரண்டு முறை அதை வழக்கமாக வைத்துள்ளார்.