Published on 03/08/2023 | Edited on 03/08/2023
தமிழகத்தில் ஆடிப்பெருக்கு திருவிழா தண்ணீரைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகவும், காவிரி நதியைப் போற்றும் ஒப்பற்ற விழாவாகவும் நடைபெறுகிறது. இந்தத் தினத்தில் புதுமணத் தம்பதிகள் நீர் நிலைகளுக்குச் சென்று அவர்களின் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை நீர்நிலைகளில் விட்டுத் தாலியை மாற்றிப் புதிய தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியைச் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு தினத்தில் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள புதுமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமாலையைக் கொள்ளிடம் ஆற்றின் காவேரி தண்ணீரில் விட்டுப் புதுத் தாலியை மாற்றிக் கொண்டனர்.