Skip to main content

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்த  பொதுமக்கள்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Cellphone theft three people arrested

 

 

செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்த காவல்துறை, கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(42). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். நேற்று மாலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் தெலுங்குபாளையம் சாலையில் பயணித்து கொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துவந்த மூன்று வாலிபர்கள் கருணாகரனிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். 

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பிடிங்க.. பிடிங்க.. என சத்தம் போட்டார். இவரின் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இளைஞர்களைப் பிடிக்க முயன்றபோது பைக்கை ஓட்டி வந்த நபர் மட்டும் சிக்க மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அந்த நபரை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

Cellphone theft three people arrested


இந்த சம்பவம் குறித்து  கருணாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்போன் திருடி பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் உக்கடம் புள்ளகாடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(23) என்பதும்  கோவை மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்துவருவதும் தெரியவந்தது. 

 

மேலும் தப்பி சென்ற 2 வாலிபர்கள் கார்த்திக்கின் நண்பர்களான 17 வயது இளைஞர் மற்றொருவர் சன்பர்குமன் என்பதும் தெரியவந்தது. கார்த்திக் அளித்த தகவலின் பேரில் மற்ற இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்