தமிழக அரசியலில் மட்டுமின்றி நடிகர் சங்க தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜே.கே.ரித்தீஷ்.திமுக சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார. இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகனாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி ஹிட்டான எல்கேஜி படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மரணமடைந்தார் இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது சினிமா துறையினரை மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்தவேளையில் தற்போது அவரது மனைவி ஜோதி மீது போலீசில் ஒரு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ரித்தீஷிடம் உதவியாளராக இருந்த கேசவன் என்பவர் தான் அந்த புகாரை அளித்துள்ளார். நான் பல வருடங்களாக ரித்தீஷிடம் உதவியாளராக இருந்துள்ளேன். அதனால் அவர் தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் என்னை தங்கவைத்தார்.அவருக்கு உதவியாளராக இருந்த போது சம்பளம் ஏதும் வழங்கவில்லை என்றும் அதற்கு பதிலாக அவரது வீட்டில் இருக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.
ரித்தீஷ் மரணமடைந்த பிறகு அவரது மனைவி ஜோதி தற்போது சொத்துக்களை சரிபார்த்து வருகிறார். இந்த வீடு குறித்து அறிந்து உடனே உதவியாளர் கேசவனை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறார் ரித்தீஷ் மனைவி . ஆனால் தனக்கு சம்பளமாக கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்தால் காலி பண்ணுவதாக கேசவன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரை அடியாட்கள் வைத்து ஜோதி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கேசவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.