பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உட்பட 180 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமான் வீடு முற்றுகை போராட்டத்தின் பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்காக சீமான் வீட்டில் பதுங்கி இருந்ததாக 180 பேர் மீது சென்னை நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல்; தடுத்தல்; மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது