Skip to main content

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி டிரைவர்! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்தும், கல்லை துக்கி வீசி உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ATM


வத்தலக்குண்டி திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர்  பணம் எடுப்பதற்கு முற்படுகிறார் அப்போது  ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை, பலமுறை முயன்று பார்க்கிறார் ஆனால் பணம் வரவில்லை. 

 

LORRY DRIVER ATTACK ATM MACHINE


இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் வசைபாடிவாறு ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் பலமுறை எட்டி உதைத்தார். பிறகும் ஆத்திரம் அடங்காதால் அருகில் இருந்த கல்லை எடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தின் மீது வீசி அதனை உடைத்து விட்டு தப்பி ஓடினார். இதனால் அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

LORRY DRIVER ATTACK ATM MACHINE


இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி  நடத்திய விசாரணையில், ஏடிஎம் மிஷினை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்து சம்பவத்தை அரங்கேற்றிய சேவுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை வத்தலக்குண்டு போலீஸார் கைது செய்தனர்.

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்