![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/MPFs2ZercpG-R77obb6s3BLxwnZ_mnDKWY_5KazusHY/1729849572/sites/default/files/inline-images/a1250_0.jpg)
சென்னையில் கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத் தயாராக இருந்தனர். அதனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டார்’ எனத் தெரிவித்திருந்தார். இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவும் மனுத் தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.