Published on 09/07/2023 | Edited on 09/07/2023
![car lorry incident andhra pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/SJC_TYqzox6uxNKR3VdurfzMa7XiUo7VHFFnAZ7BUDg/1688895954/sites/default/files/inline-images/acc_3.jpg)
ஆந்திராவில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடவைச் சேர்ந்த 7 பேர் திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த கார் காளஹஸ்தியில் உள்ள மிட்டகந்திரிகா என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.