![A book on the status of 110 rule notices in the AIADMK regime!](http://image.nakkheeran.in/cdn/farfuture/C6OhhuK2Byge_6qVyqvsYkzopa3xXVOqBXAcJmw2eOo/1648054231/sites/default/files/inline-images/tn%20govt5_3.jpg)
அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் புத்தகமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையானது தற்போதைய கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களின் இன்று மேஜைகளிலும் வைக்கப்பட்டது. மொத்தம் 470 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகள் குறித்து விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்படாத அறிவிப்புகள், கைவிடப்பட்ட அறிவிப்புகள், நிதி விடுவிக்கப்படாமல் பணிகள் தொடங்கப்படாமல் உள்ள அறிவிப்புகள் குறித்தும், அதன் மதிப்பீடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 3.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், அவற்றில் 25 சதவிகித நிதியிலான 1,167 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 1,704 அறிவிப்புகளில் 1,167 திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டதாக அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.