![a1](http://image.nakkheeran.in/cdn/farfuture/lNhmZc9mjKvCOfXBlpPl6r-kavLvIiGVSP6h68SgO1E/1629632452/sites/default/files/2021-08/anna11.jpg)
![a2](http://image.nakkheeran.in/cdn/farfuture/qNJ-xMzMQnUn37wkYm0J2nLP1ZkxZuXO6pr8DswNLA4/1629632452/sites/default/files/2021-08/anna9.jpg)
![a3](http://image.nakkheeran.in/cdn/farfuture/zkGOB-PRbAouk9G_kVPufnuyjUbza9gXz0rQeZlmwmY/1629632452/sites/default/files/2021-08/anna7.jpg)
![a4](http://image.nakkheeran.in/cdn/farfuture/w_8-42Q3hQ1fw_EFvEwYHmVFSVWd6yNacWUq8oXapDo/1629632452/sites/default/files/2021-08/anna8.jpg)
![a5](http://image.nakkheeran.in/cdn/farfuture/qCb8NkDtt2EjCwMlwICcRn1WLit-VHrdsmvefdg2WSg/1629632452/sites/default/files/2021-08/anna6.jpg)
![a6](http://image.nakkheeran.in/cdn/farfuture/bWGEcVCnsr-l994DXi9CJ3adfyBZeIfB9zbdNRaJqLY/1629632452/sites/default/files/2021-08/anna5.jpg)
![a7](http://image.nakkheeran.in/cdn/farfuture/f40bcTF0jSXfOmp0SP9XZAcHOW6sqwQCuHfOIHhsBlM/1629632452/sites/default/files/2021-08/anna3.jpg)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலின் போது, தேர்தலில் வெற்றியை ஈட்டித் தரும் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான டாக்டர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று (22/08/2021) மதியம் 02.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை (நகர்), ஈரோடு தெற்கு ஆகிய நான்கு மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா கார்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.