Skip to main content

கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பி; பிறந்தநாளிலேயே நேர்ந்த சோகம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 Birthday tragedy; Brother and sister drowned while playing cricket

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள் ராஜா வயது 10 இளையவன் ஸ்ரீசாந்த் வயது ஏழு. இருவரும் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதால் எப்போதும் போல் அவர்களும் அருகில் உள்ள ஏறந்தாங்கல் ஏரிக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றனர். இளையவனான ஸ்ரீசாந்துக்கு இன்று பிறந்தநாள் என்பதால் வீட்டில் அனைவரும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிவிட்டு அண்ணனுடன் கைகோர்த்து கிரிக்கெட் விளையாடச் சென்றான்.

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது ஏரியில் கிரிக்கெட் பால் விழுந்தது. கிரிக்கெட் பாலினை தேடுவதற்காக சென்ற அண்ணன் தம்பிகள் இருவரும் நேற்று பெய்த மழையால் அங்கு மணல் திருட்டால் அதிக ஆழம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியாகினர்.

அவர்கள் நீரில் விழுந்ததைக் கண்ட சில பேர் கூச்சலிடவே அங்கு போர்வெல் ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த முரளி என்பவர் வேகமாக ஓடி சென்று அந்தப் பள்ளத்தில் குதித்து பிள்ளைகளைத் தேடத் தொடங்கினார் பிள்ளைகள் ஏதும் சிக்காததனால் மூச்சு வாங்க மேலே ஏறியவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். உடனடியாக விரைந்து வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களும் சேர்ந்து பங்கிற்கு குழந்தையை தேடவே முதல் குழந்தை ராஜா உயிரற்ற நிலையில் சடலமாக கைக்கு கிடைத்துள்ளான்.

மற்ற இடங்களிலும் தேடியதில் தம்பி ஸ்ரீ சாந்தும் சடலமாக  கண்டெடுக்கப்பட்டான். பிறந்தநாளில் நேர்ந்த இந்தச் சோகம் ஊர் மக்களை மற்றும் சுற்றி இருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற தாய் செம்பருத்தி கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு சென்று ஒவ்வொரு வீடாகச் சென்று ஸ்ரீசாந்த் வாடா எங்கிருக்கிறாய் ஸ்ரீசாந்த் வெளிய வாடா என்று அழைக்க துவங்கியது பார்க்கவே நமக்கும் ஊர் மக்களுடன் சேர்ந்து கண்ணீரை வரவழைத்தது.

சார்ந்த செய்திகள்