Skip to main content

1 கோடியை திருடியவர்கள் சிறையில் கொடுத்த பிறந்தநாள் டிரீட் !

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சமீபத்தில் சிறையில் கைதிகள் அனைவரும் சிறையில் உள்ள அதிகாரிகளை சரிகட்டி அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து சொகுசு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று புகைப்படங்களுடன் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. 



திருச்சி சிறையில் ஏற்கனவே ரவுடி பட்டரை சுரேஷ் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு சர்ச்சை ஏற்படுத்தியது. ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி கொண்டாடியதாலே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருச்சியில் வழிப்பறி கொள்ளையர்கள் சிலர் கைதாகி சிறை சென்றவர்கள் சிறையில்  வெகு விமர்சையாக பிறந்தநாள் கொண்டாடி இருப்பது தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

prison


சென்னையை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான ஏவிஎம் பைனான்ஸ் தமிழகம் முழுவதும் கிளை நிறுவனங்கள் வைத்திருக்கிறார். திருச்சியில் ஒருவருக்கு பைனான்ஸ் கொடுப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் மதியழகன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் 1 கோடி பணத்துடன் அக்டோபர் 27ம் தேதி திருச்சிக்கு வந்தனர். பாலக்கரையை நோக்கி செல்வதற்குள் காரில் வந்த நபர்கள் பைனானஸ் ஊழியர்களை தாக்கி பணத்தை பறித்து சென்றனர். 
 

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பாக விசாரிக்கையில். நவம்பர் மாதம் 5ம் தேதி தனிப்படை போலீசார், அப்துல் ஸ்மாயில் முகமது ரபீக், ஜாகீர் உசேன், முகமது சமீர், சாகுல்,ஹமீது ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 



இந்நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழிப்பறி திருடர்களில் ஒருவரின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சிறைக் கைதிகள் அனைவருக்கும் தங்களது சொந்த செலவில் ஐந்து பீடிகள், ஒரு கப் டீ மற்றும் இரண்டு வடை என டீரிட் கொடுத்து பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தனர். இதற்கு சிறையில் உள்ள முக்கிய புள்ளிகள் ஆதரவும் சிறையில் சில அதிகாரிகள் ஆதரவுடன் நடைபெற்றது என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்