Skip to main content

ஜாமீனா? போலீஸ் கஸ்டடியா?-நேரில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணு

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
Bail? Police custody?-Mahavishnu presented in person

அண்மையில் அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சொற்பொழிவை நடத்திய மஹாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மஹாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள மஹாவிஷ்ணு தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு மகாவிஷ்ணு தரப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம் மகாவிஷ்ணுவை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி கடந்த திங்கள் கிழமை காவல்துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், புழல் மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நான்காவது அமர்வு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே மகாவிஷ்ணுவின் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் முன் ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையும், போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி கோரியுள்ள மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு பின் மகாவிஷ்ணுவிற்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது போலீஸ் கஸ்டடி கிடைக்குமா என்பது தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்