Skip to main content

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! த.மு.மு.க முன்னெடுத்த கருஞ்சட்டை கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! த.மு.மு.க முன்னெடுத்த கருஞ்சட்டை கண்டன ஆர்ப்பாட்டம்!



1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபர்ஹரான் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 1995 முதல் டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6ஐ "பயங்கரவாத எதிர்ப்பு" நாளாக கடைப்பிடித்து அன்று தமிழகத்திலுள்ள அணைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்திருந்தனர்.



அதன்படி, தமிழக முழுவதும் பெரும்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது த.மு.மு.க!  சென்னையில் தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம். சார்பில் அ.சவுந்தர்ராஜன், சி.பி.ஐ. சார்பில் சி.மகேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சுப.வீரபாண்டியன், மே17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாமர் மசூதி இடிப்பில் பா.ஜ.க.வின் அரசியலையும் குற்றவாளிகளையும் தோலுரித்தனர் தலைவர்கள்!

-இளையர்
படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்