![Nilgiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/DR-TCvoHpPbtXC7CSurolR1GZw66pU_GozDc8HItDOw/1593747014/sites/default/files/2020-07/21.jpg)
![Nilgiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/eEC1Y9W3vid5x49ufbtsjJPLQtyZ5LS6o22VDIUoPKY/1593747015/sites/default/files/2020-07/22.jpg)
![Nilgiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/VbnK3i_NNWew3AQz9_rafoUKiFtQ2F7Z-Wu-drgfEW4/1593747015/sites/default/files/2020-07/23.jpg)
![Nilgiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tr_45vmfUKG-eQVVOaVuPAJLWDQ43iEoaNWsNzCIuq0/1593747015/sites/default/files/2020-07/25.jpg)
![Nilgiri](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lu5qlO_ccYkr1MFXok-Eai4fKoYv6k9OD-PTuLRqztU/1593747015/sites/default/files/2020-07/24.jpg)
Published on 03/07/2020 | Edited on 03/07/2020
நீலகிரி எம்.பி.யான தி.மு.க.-வின் ஆ.ராசா கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு உதவிட தனது மேம்பாட்டுத் தொகுதியில் இருந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் பணம் வழங்கினார். அது போக 200 டன் அரிசியைக் கொடுக்கவும் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி குன்னூர் மக்களுக்கு முன்னாள் மினிஸ்டர் இளித்துறை ராமச்சந்திரன் அரிசி, காய்கறிகளும், மாவட்டச் செயலாளர் முபாரக் காய்கறிகளும் கொடுத்து உதவி வருகிறார்கள். கூடலூருக்கு எம்.எல்.ஏ திராவிடமணியும், பந்தலூருக்கு ராஜாவும் மக்களுக்கு உதவி செய்ய, உதகை நகரச் செயலாளர் ஜார்ஜ் 6,500 மக்களுக்கும் மேலாக அரிசி, மளிகைப் பொருட்களைக் கொடுத்து உதவி வருகிறார்கள்.