Skip to main content

அதிமுக அணையும் விளக்கல்ல பிரகாசமாக எரியும் எல்.இ.டி விளக்கு- தம்பிதுரை

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

 

 

thampithurai

 

கரூர் பாராளுமன்ற தொகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிய சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசுகையில், ஜி.எஸ்.டியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டிக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் வசம் சென்றுள்ளது. எனவேதான் ஆரம்பத்திலேயே அதிமுக ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

 

ஸ்டாலின் அதிமுகவை அணையும் விளக்கு என்று குறிப்பிட்டுள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு

 

அதிமுக அணையும் சாதாரண விளக்கல்ல ஐந்து வருடம் கேரண்டியாக, பிரகாசமாக எரியும் எல்.இ.டி விளக்கு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அதிமுகதான் 40 தொகுதியிலும் வெற்றிபெறும் என்றார். 

சார்ந்த செய்திகள்