Published on 04/12/2020 | Edited on 04/12/2020
![Actress Jayachitra's husband Ganesh passes away](http://image.nakkheeran.in/cdn/farfuture/fSdKbcao3UJwudTql9xm-zLyxhOHfkVnsDufvh-_-R0/1607101177/sites/default/files/inline-images/qawe131313.jpg)
1970-களில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர் பிரபல நடிகை ஜெயசித்ரா. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.
இவரின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான கணேஷ் திருச்சியில் இன்று காலமானார். அவரது உடல் நாளை காலை 9 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கணேஷின் மகனான அம்ரிஷ், 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'சார்லி சாப்ளின் 2' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.