Published on 28/03/2020 | Edited on 28/03/2020
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை; ஆனால் வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் கரோனா நோட்டீஸ் ஒட்டியிருந்தது சர்ச்சையான நிலையில் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.