Published on 18/04/2022 | Edited on 18/04/2022
![கத](http://image.nakkheeran.in/cdn/farfuture/2oFp7jpg9PtRosi_LHFNgoAOaYjms5TvMhk_igDWOXM/1650302289/sites/default/files/inline-images/gkl.jpg)
பள்ளிக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய நவரசன் என்பரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி நவரசன் என்பருக்கு 70 ஆண்டு சிறைத் தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கூட்டியுள்ளது. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.