Published on 24/04/2021 | Edited on 24/04/2021
![7 kg gold worth Rs 3.50 crore seized in Trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/OxeilMm-c7m6YBslo0ujcxSayoMHpHdN0t3FWmg6sLM/1619286021/sites/default/files/inline-images/dryreyre_2.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ3.50 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த சந்தேகப்படும்படியான பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 8 பயணிகளிடமிருந்து தங்கக்கட்டி, பேஸ்ட் வடிவிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதில், ரூ3.50 மதிப்பிலான 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்து, 8 பேரிடம் தொடர்ந்து மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.