திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பவர் கந்தசாமி. இவரது அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருப்பவர் ஜானகி. இவரது வீடு செங்கம் சாலையில் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ந்தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுயிருந்துள்ளனர்.
29ந்தேதி இரவு 10.30 மணிக்கு வெளியூரில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். அப்படி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கேட் கதவு உடைக்கப்பட்டு, பின்னர் கதவு பூட்டு திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
வீட்டில் அலமாரியில் துணிகளுக்கு அடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுயிருந்த 12 பவுன் தங்கநகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் களவு போயிருப்பதாக திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளது ஜானகி குடும்பம். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீடு என்பதால் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.
திருடடிய திருடன்கள் உள்ளுரா ?, வெளியூரா என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.