Skip to main content

ஈரோட்டில் 1400 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  அதன்படி மாவட்டத்தில் 807 இடங்களில் 1500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

1400 rifles handed over to police in Erode

 



இதில் 807 வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் விதிகளின்படி லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதை காவல்துறையிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.

இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் துப்பாக்கி  உரிமம் பெற்றவர்கள் 1400 பேர் உள்ளனர். வருகிற  உள்ளாட்சித் தேர்தலையொட்டி அவர்களிடம் இருக்கும்  துப்பாக்கிகளை  திரும்ப ஒப்படைக்குமாறு கூறியிருந்தோம். இதையடுத்து 1400 பேரும் அவர்களது துப்பாக்கியை திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

மாவட்டத்தில் 13 நிரந்தர வாகனச் சோதனை சாவடி உள்ளது. தற்போது தேர்தலுக்காக கூடுதலாக 14 சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்