Published on 22/11/2019 | Edited on 22/11/2019
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நவ. 23ம் தேதி (நாளை) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி இத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும், எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சேலம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் இன்று (நவ. 22) மாலை தெரிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.