பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்நாளான அக். 30ம் தேதி ஆண்டுதோரும் தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 30ஆம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மோடியின் இந்த தமிழ்நாட்டு பயணத்திற்கு பிறகு அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. பிரதமர் மோடி வந்தால், அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஓ.பி.எஸ் திட்டமிட்டுவருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், எடப்படியும் அதற்கு நிகராக திட்டங்களை ஆலோசித்து வருவதாக இ.பி.எஸ். தரப்பினர் மத்தியில் பேசப்பட்டுவருகிறது. ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். இருவரையும் மோடி சந்தித்து பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி வட்டாரம் தெறிவிக்கிறது.
அதிமுகவினர் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். விருப்ப, வெறுப்புகளை மறந்து இணைந்து செயல்பட ஓ.பி.எஸ்.ஸும் கூட ஆலோசிக்கலாம். ஆனால் எடப்பாடியோ அதிமுகவின் ஒற்றைத் தலைமையிலேயே இருந்து வருகிறார். கடந்த மாதம் எடப்பாடி, அமித்ஷா சந்தித்தபோதும் இது தொடர்பாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்த முறையும் எடப்பாடி மனம் மாறவில்லை என்றால், ஓ.பி.எஸ்-க்கு வாய்ப்புள்ளது என்கின்றனர் அதிமுகவினர். மேலும், மைத்திரேயன் போல், இன்னும் பலரும் மோடியின் தமிழ்நாட்டு பயணத்திற்கு பிறகு ஓ.பி.எஸ் பக்கம் வரலாம் எனவும் சொல்லப்படுகிறது. இ.பி.எஸ். தரப்பினர் இது குறித்து பேசும்போது, இப்படியான அரசியல் பேச்சு இருந்துகொண்டே தான் இருக்கும். எங்கள் கட்சி விவகாரத்தில் நாங்களே கூடி முடிவு எடுப்போம் என்கின்றனர்.