கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.மேலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது.வருகிற 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 22 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று அதிமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதுதான் தினகரனின் திட்டம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிமுகவில் நிகழும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தியாளர்களை தனது கட்சியில் இணைப்பது, மறைமுக நடைபெறும் பணப்பட்டுவாடா பேச்சுவார்த்தை,அதிமுகவில் இருந்து தனது கட்சிக்கு வருபவர்களுக்கு பணம்,பதவி என அனைத்தும் தர ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய நிலவரப்படி திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அவர்களுடன் சேர்ந்து ஆட்சியை கலைத்து விடலாம் என்ற யோசனையும் தினகரன் கட்சியில் நிகழ்வதாக கூறப்படுகிறது.இது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட சில தொகுதிகளை தினகரனின் அமமுக கைப்பற்றினால் இவர்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவைப்பட்டால் சில நிபந்தனைகளை அதிமுக கட்சிக்கு தினகரன் வைக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திமுக,அமமுக ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படும் இல்லை அதிமுக ஆட்சி தொடருமா என்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.மே 23தேதிக்கு பிறகு அரசியலில் என்ன நடக்கும் என்று அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.