கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 98 டாஸ்மாக் கடைகளில் 72 கடைகள் பாருடன் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார் டெண்டர் ஏலம் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பாருக்கும் ரூபாய் 4 லட்சம் அதிமுக மாசெக்கள் கேட்டதால் பலர் பார் எடுக்க முடியாமல் அந்த மாசெக்களிடம் பேரம் பேசி வருகின்றனர்.
இதில் குமரி மேற்கு மாவட்டத்தில் சுமார் 40 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பார் கேட்டு மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கத்திடம் பார் வைப்பதற்கான இடத்திற்கு என்ஓசியுடன் பலர் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஜான் தங்கம், எல்லாமே என் பி.ஏ. மனோதான் பார்க்கிறார் என அவரை தொடர்பு கொள்ள சொல்கிறார்.
இதில் சித்திரங்கோடு பகுதியில் இரண்டு கடைகளுக்கு பார் நடத்த என்ஓசியை வைத்து கொண்டு ராதா என்பவர் மா.செ.யின் பி.ஏ. மனோவை தொடர்பு கொண்டார். அப்போது பார் சம்மந்தமாக இருவரும் உரையாடும்போது மனோ, ராதாவிடம் பார் ஒன்றுக்கு 4 லட்சம் கண்டிப்பாக தர வேண்டும். அதில் 2 லட்சம் மந்திரிக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட அந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.