Skip to main content

உதவி கேட்ட 'வீரப்பன்' மனைவி... உடனடியாக உதவி செய்த தி.மு.க. எம்.பி!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

mp

 


இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750- லிருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303- லிருந்து 3,435 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298- லிருந்து 45,300 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


இதனையடுத்து பல்வேறு மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. எம்.பி.யிடம் உதவுமாறு வீரப்பன் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தி.மு.க. எம்.பி  டாக்டர். செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வீரப்பன் அவர்களின் வாழ்வினையர் முத்துலட்சுமி வீரப்பன் என்னை தொடர்புகொண்டு கேட்டதற்கு இணங்க அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை, இன்று அவர் நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கபட்டுள்ள கைம்பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.    

 

 

 

சார்ந்த செய்திகள்