மத்திய பாஜக அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. அதில் ஏழை மக்கள் நலன் காக்க எந்த அறிவிப்பும் இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நிதிநிலை அறிக்கையை மிகவும் கண்டித்து உள்ளது.
மேலும் இந்த நிதிநிலை அறிக்கைக்கு எதிராக நாடு முழுக்க நேற்று (17/02/2020) பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்து ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே மக்கள் நலன் பற்றி எந்த கவலையும் இல்லாமல் கல்வி சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தாமல் உழைப்பாளிகள் வியர்வை சிந்தி கட்டிக்காத்து வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அரசின் முடிவை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டனர்.