கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு அமமுக, எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாமக கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து திமுக செயலாளர் பரமசிவன் அங்குசென்று பணப்பட்டுவாடாவை தடுத்தார் எனக்கூறப்படுகிறது.
கடந்த 12ம் தேதி அன்று பரமசிவனின் வீடு மற்றும் அவரது கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பரமசிவனின் கார் எரிந்து நாசமானது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜெரினா, தேவி மற்றும் திமுகவை சேர்ந்த சசி ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து டி.பி. சத்திரம் காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது அவர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்ந்தனர். அதில் 6 பேர் கொண்ட கும்பல், 3 பைக்குகளில் ஹெல்மெட் மற்றும் கர்சீப்பால் முகத்தை மூடியபடிவந்து, வீட்டில் குண்டுவீசிவிட்டு தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து ஆணையர் ஜெகதீஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் வில்லிவாக்கம், திருநகரைச்சேர்ந்த சயித் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நிர்வாகி, சூளைமேட்டை சேர்ந்த யுனேஷ் எழும்பூர் 13 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.