


த.மா.கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன். கரோனா தொற்றினால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே உடல் ரீதியாக பிரச்சனைகள் இருந்த நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் அரசு மருத்துமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
புலியூர் நாகராஜன் கடந்த 35 வருடங்களாக திருச்சி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரின் இழப்பு விவசாயிகளுக்கு பெரிய இழப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் புலியூர் நாகராஜ் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'என்ன புலியூர் நகராஜ் எப்படி இருக்கீங்க?' என்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றினால் மரணம் அடைந்த நிலையில் திருச்சி மாவட்ட த.மா.கா. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.