Published on 23/03/2020 | Edited on 23/03/2020

அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கரோனா பாதிப்பை தடுக்க தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் இதை நீட்டிக்க வேண்டும்! இவ்வாறு கூறியுள்ளார்.