Skip to main content

“கூட்டத்திற்கு போவார்கள்.. மேடைகளில் இருப்பார்கள்... ஆனால்” - வானதி சீனிவாசன் 

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

“They will go to Congress meetings.. they will be on platforms... but” - Vanathi Srinivasan

 

“நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எந்த காரணத்துக்காக அரசு மதுக்கடைகளை நடத்துகிறதோ அதற்கு முரணாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏன் அமல்படுத்தவில்லை எனக் கேட்டால் அரசாங்கம் சொல்லும் காரணம், கள்ளச்சாராயம் இதனால் பெருகும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சொல்கிறார்கள். ஆனால் அரசே கடையை நடத்திக்கொண்டு அதற்கு பின்பும் கள்ளச்சாராய சாவுகள் நடக்கிறது என சொன்னால் அரசே அதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

 

அதுமட்டுமல்ல எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்பட்ட பின் மக்கள் கவனத்திற்கு வந்த பின் நடவடிக்கை எடுத்து பயனில்லை. அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளும் கட்சியின் ஆதரவாக கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக அதிகமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மதுவிலக்கு பிரிவு என்று ஒன்று உள்ளது. அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு போவார்கள். அவர்களது மேடைகளில் இருப்பார்கள். ஆனால் தேர்தல் களத்தில் வரும்போது கேரளா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுக்கு எதிராகத்தான் காங்கிரஸ் உள்ளது. அப்படி இருக்கும் போது கர்நாடகத்தின் வெற்றியை மட்டும் வைத்துக்கொண்டு பாஜகவையும் மோடியையும் வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்