Skip to main content

செய்யூர் அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி தொடர் போராட்டம்..!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

ddd

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

 

ஜெயலலிதா, சசிகலா இல்லாமல் வெளியான முதல் வேட்பாளர் பட்டியல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேட்பாளர் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அறிவிக்கப்பட்ட சில வேட்பாளர்களை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கணிதா சம்பத்க்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி அதிமுக தொண்டர்கள் கடந்த மூன்று நாட்களாக போராடிவருகின்றனர்.

 

நம்மிடம் பேசிய தொண்டர் ஒருவர், "வேறு பகுதியில் இருந்து வந்து இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வா ஆனா எப்படி எங்க குறைகளை அவர்களிடம் எளிதாக சொல்ல முடியும். கடந்தமுறை, வெளியூர் வேட்பாளரான முட்டுக்காடு முனுசாமிக்கு சீட்டு கொடுத்ததால அதிமுக தோல்வி அடைஞ்சுபோச்சு. இந்தமுறையும் அதே தவறு செய்தா அது எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும். அதனால லோக்கல் நிர்வாகிகளுக்குத் தொகுதிய கொடுக்க வேணும்.” என்றார்.

 

தற்போது செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணிதாசம்பத், செங்கல்பட்டு பகுதி வெல்லத்தைச் சேர்ந்தவர். 2001இல் திருப்போரூர், 2011இல் மதுராந்தகம் தொகுதிகளில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்