தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்திருக்கிறார். அவர்களோ, நாடு முழுக்க வீசுற மோடி எதிர்ப்பு அலை, காங்கிரஸின் ஆதரவு அலையாக மாறியிருக்கிறது. அதனால் திமுகவிடம் டபுள் டிஜிட்டில் நாம் சீட்டு கேட்க வேண்டும், கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனை கே.எஸ்.அழகிரி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களும் ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமை எந்த ரியாக்சனையும் காட்டவில்லையாம்.
இந்தநிலையில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். போன எம்பி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோதும், அதன் வேட்பாளர் வசந்தகுமார் இரண்டாம் இடம் பிடித்த கன்னியாகுமரியிலோ அல்லது ராஜீவ்காந்தி உயிர்நீத்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலோ ராகுல் காந்தி நின்றால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையும் என்றும் நம்புகிறார்கள். இதுபற்றி டெல்லி தலைமையிலும் கூடிய சீக்கிரம் சொல்லப் போகிறார்களாம்.