
குஜராத்தில் 10 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் மோகன் சிங் பாஜகவில் இணைந்துள்ளார். 78 வயதாகும் மோகன்சிங் ராத்வா பழங்குடியினத் தலைவர்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்ப்பூர் தொகுதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏவாக 10 முறை தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் மோகன்சிங் ராத்வா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார்.
ஏற்கனவே குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்த தனது மகன் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பியுள்ளார். காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி நரண் ரத்வாவும் தனது மகனுக்கு இத்தொகுதியைக் கேட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரசின் மூத்த தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது காங்கிரசிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.