Skip to main content

“தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்துவிட்டன” - இ.பி.எஸ் விமர்சனம்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 EPS crictized tamilnadu government

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள் அதிகரிக்கின்றன. திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முதலமைச்சரின் தொகுதியிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கமுடியவில்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்கின்றதோ, அப்போதெல்லாம் ஜனநாயக முறைப்பட இடைத்தேர்தல் நடக்காது. அதனால்தான், ஜெயலலிதா 5 சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணித்தார். 

திமுக ஆட்சியில் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களை அழைத்து சென்று பட்டியலில் அடைத்து விடுவார்கள். அங்கிருக்கும் வாக்காளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு என மூன்று வேளைகளிலும் உணவுகளை வழங்கி, கையில் பணத்தை கொடுத்துவிடுவார்கள். எந்த ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களும் வாக்காளர்களை சந்திக்க முடியாது. அமைச்சர்கள் ஏரியாக்களை பிரித்துக் கொண்டு பணமழை பொழிந்து வருகிறார்கள். 

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயக படுகொலை தான் அரங்கேறும். அதனால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். அதிமுகவில் ஓபிஎஸ் விஸ்வாசமாக இருந்ததில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 3% தான் ஆதரவு இருந்தது. எங்களுக்குத தான் 97% ஆதரவு இருந்தது. கட்சியைப் பற்றி கவலைப்படாமல் தன் மகனை பற்றி மட்டுமே ஓபிஎஸ் கவலைப்பட்டார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்