எஸ்.பி.ஐ. வங்கியில் நகை மதிப்பீட்டாளருக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குமாறு எஸ்.பி.ஐ.யின் மும்பை தலைமை அலுவலகம் 2018இல் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி நகை மதிப்பீடு செய்யும்போது கிராமப்புற வங்கியாயின் 50 முதல் 300 ரூபாய் வரையும், நகர்ப்புற வங்கியாயின் ரூ. 100 முதல் 600 ரூபாய் வரையும் கமிஷன் தர வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் எஸ்.பி.ஐ. மேல்மட்ட அலுவலர்கள்வரை நகை மதிப்பீட்டாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த பின்னும் இந்தப் புதிய கமிஷனைத் தராமல் பழைய கமிஷனையே வழங்கிவருவதாக எஸ்.பி.ஐ. நகை மதிப்பீட்டாளர் சங்கத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
புதிய கமிஷனைக் கேட்டு வலியுறுத்துபவர்களை, பணிநீக்கம் செய்துவிடுவதாக வங்கி அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர் என நகை மதிப்பீட்டாளர் சங்கத்தினர் கவலை தெரிவிப்பதோடு, இதுகுறித்து அதிகாரிகள் ஆவன செய்து நகை மதிப்பீட்டாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.