இரட்டை இலை சின்னம் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ey3QmzYxmqvumX08UXdiWKASPKHIQTwucoRT6FXNHmg/1551364498/sites/default/files/inline-images/admk_17.jpg)
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
இரட்டை இலை தொடர்பாக டெல்லியிடம் சில முயற்சிகளை அதிமுக தரப்பு எடுத்து வந்ததை நேற்று நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் அதிமுகவிற்கு இரட்டை இலையை ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இத்தீர்ப்பில் இரட்டை இலை ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பிற்கே சொந்தம் என கூறியுள்ளது. மேலும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.