Skip to main content

தோல்விக்கு இந்த அமைச்சர்தான் காரணம்... மேலிடத்தில் சி.பி.ஆர். குற்றச்சாட்டு

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்த முறை அதிமுக அமைச்சர் வேலுமணியோட உள்குத்து காரணமாகத்தான் நான் தோற்றதாக பாஜக மேலிடத்தில் சொல்லியிருக்கிறார்.


  S. P. Velumani - C. P. Radhakrishnan



பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுமையால் சரிந்த அதிமுக செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனோடு சேர்ந்து, வேலுமணி கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் தயவால் இரண்டாவது முறையாக சீட் வாங்கி தோற்றப்போன பொள்ளாச்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு காட்டிய அக்கறையை கோவையில் தனக்கு வேலுமணி காட்டவில்லை. 2014ல் அதிமுக துணை இல்லாமல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளைவிட இந்த முறை 10 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கிறது என்று லோக்கல் பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். 


 

சூலூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க ரொம்பவே மெனக்கெட்ட வேலுமணி, கோவை எம்.பி. தொகுதியை அலட்சியத்தால் தோற்கடித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணனை ராஜ்யசபா எம்.பி.யாக்கி மந்திரி பதவி தர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தின்போது சி.வி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது நரேந்திர மோடி ஆசைப்படுகிறாராம். இரண்டு பேரும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஒன்றாக வேலைத்திட்டங்களை கவனித்தவர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்