ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத் திறப்பு விழாவை மையமாக வைத்தும் ஒரு அரசியல் நடப்பதாக சொல்லப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல், வன்னியர் சமுதாய வாக்கு என்று எல்லா அரசியலும் இதில் இருப்பதாக கூறுகின்றனர். ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் தயாராகியுள்ள மணி மண்டபத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் எடப்பாடி திறந்துவைக்க நினைத்துள்ளார். ஆனால் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட வன்னிய அமைச்சர்கள், நேரில் சென்று திறந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அதன்படி இன்று எடப்பாடி படையாச்சியார் மணிமண்டபத்தைத் திறந்து வைத்துள்ளார்.
பொதுவாக வன்னிய சமூக முன்னோடித் தலைவர்களைக் கொண்டாடும் இயல்பில்லாத பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இப்போது படையாச்சியார் விசயத்தில் தன் கொள்கையை மாற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். வன்னிய மக்களின் பேராதரவை மணிமண்டபம் மூலம் அ.தி.மு.க. மட்டுமே சிங்கிளாக அறுவடை செய்துவிடக் கூடாது என்று கணக்கும் இதில் இருப்பதாக சொல்கின்றனர். திடீர்க் காய்ச்சலால் 19-ந் தேதி இரவு டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அட்மிட் ஆன நிலையில் அவரை உடல்நலன் விசாரிக்கச் சென்ற முதல்வர் எடப்பாடியிடம், இங்கேயே எனக்கான அழைப்பைக் கொடுத்து விடுங்கள் என்று அவர் கையாலேயே வாங்கிக் கொண்டார் ராமதாஸ்.