கடந்த 5 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார்.
இந்த நிலையில், எண் கணித ஜோதிடர் ஒருவர் ரஜினிகாந்தின் பிறந்த தேதி, ரஜினிகாந்த் பெயரின் கூட்டுத்தொகை ஆகியவற்றை கணித்துக் கூறியுள்ள அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும் இனிமேல் அவர் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அதன் பின்னரும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்றும் இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருக்கும் நிலையில் எண்கணித ஜோதிடர் கூறியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.