’’இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. திமுக, காங்கிரஸ், இன்னும் பிற கட்சிகள் இன்றைக்கு அரசியல் காரணங்களுக்காக எது வேண்டுமானாலும் பேசலாம். இதே திமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் 7 பேரையும் விடுவிக்கவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு அவர் பதில் கேள்வி எழுப்பினார்.