Skip to main content

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை; உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

Rajendrabalaji's request; Supreme Court rejected

 

அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், கடந்த நவம்பர் மாதம் அளித்த உத்தரவில் தமிழகத்திற்குள் சென்று வர அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசியல் நிகழ்வுகளுக்காக அடிக்கடி தமிழகத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது. எனவே ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி வெளியே செல்ல வேண்டுமானால் எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகி மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாட்டை விட்டு ராஜேந்திர பாலாஜி செல்வதை அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்