Published on 28/05/2019 | Edited on 28/05/2019
இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பத்தியாளர்களும் சென்றனர். பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியது, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கிருஷ்ணசாமி பதிலளிக்கத் தொடங்கினார். ஆனால் போகப்போக அவர், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கோபமாக பேச ஆரம்பித்துவிட்டார். ஒருகட்டத்தில் கோபமான கிருஷ்ணசாமி ஒரு பத்திரிகையாளரை பார்த்து நீ என்ன ஜாதி, நீ என்ன ஊரு என கேள்வி கேட்டார். இதில் அதிர்ந்த பத்திரிகையாளர்கள் நீங்கள் எப்படி அதை கேட்கலாம் என கேட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. என்ன இது, ஒரு தலைவர் இப்படி பேசலாமா என மக்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.