Skip to main content

பாஜகவால் அசிங்க பட போகும் பாமக... திமுக எம்.பி அதிரடி ட்விட்... அதிருப்தியில் பாமகவினர்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசித்து வருகிறேன். மேலும் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் பிறகு கூட்டணி வைப்பதை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக கட்சி கூட்டணியில் இருப்பது குறிப்படத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வருகிற சட்ட மன்ற தேர்தலில் பாஜக, ரஜினி, பாமக மற்றும் சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.   
 

dmk

 


இந்த நிலையில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக கூட்டணி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா... 2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிக பெரிய அவமானமான தோல்வி சந்திக்கபோரங்க என்றும்,  இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்க போவது அர்ஜுனன்/கிருஷ்ணர் என்று நீங்கள் நம்பும் இருவர் டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று ட்விட் செய்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாமகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்