தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். அப்போது அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரத்தபோது, ‘முன்னதாக ஆளுநர் ரவி, டெல்லிக்குச் சென்றபோது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டாலின் அமைச்சரவை சகாக்கள் ஆகியோரை தீவிரமாக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கும்படி, அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி ஆளுநர் ரவியும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினார். இந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிசாமியும் அவரது சகாக்களும், ஊரக உள்ளாட்சித் தேர்தல், முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு என திமுக மீது புகார்களை ஆளுநரிடம் கொடுத்தார்கள்.
இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் டெல்லி சென்ற கவர்னர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், தொழில்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை, மணல் காண்ட்ராக்ட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ரிப்போர்ட்டை பிரதமர் மோடியிடம் கொடுத்திருக்கார். இது தவிர, தங்கள் மீதான ரெய்டின் பின்னணி குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சொன்ன ரகசிய தகவலையும் மோடியிடம் ஆளுநர் தெரிவித்திருப்பதாகவும், நீட் தேர்வு மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்த திமுகவின் நிலைப்பாடு குறித்தும் மோடியிடம் கவர்னர் விவாதித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது’ என்கிறார்கள்.