Skip to main content

''சொத்து மதிப்புக்கு வரியா? அல்லது சொத்து மதிப்பே வரியா?''-பாஜக அண்ணாமலை கேள்வி!  

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

'' Is the property worth the tax? Or property value tax? '' - BJP Annamalai question!

 

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிப்பட்டிருந்தது.

 

dmk

 

இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்பொழுது, ''இந்த வரி உயர்வை 2018 ஆம் ஆண்டே அதிமுக 200 சதவிகிதம் உயர்த்தி இருந்தார்கள். தேர்தல் வரும் காரணத்தால் அதனை உடனடியாக நிறுத்திவிட்டு தேர்தலுக்கு பிறகு உயர்த்துவதாக நிறுத்தியவர்கள்தான் அவர்கள்.அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் ஏழை பணக்காரர் என்று இல்லாமல் எல்லோருக்கும் ஒரே முறையிலே வரி உயர்வு தரப்பட்டது.நமது முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், 1800 சதுரடிக்கு மேல் உள்ளவர்களுக்கு வரியை கூடுதலாக உயர்த்தி உள்ளார். இதுதான் இன்றைய நிலைமை. மத்திய அரசு சொல்லிவிட்டார்கள் சொத்துவரியை ஏற்றவில்லை என்று சொன்னால் இந்தாண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் நிதி உங்களுக்கு வராது என்று கட்டளையிட்டார்கள்'' என்றார்.

 

bjp annamalai

 

இந்நிலையில் இது தொடர்பாக  தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ''சொத்து மதிப்புக்கு வரியா? அல்லது சொத்து மதிப்பே வரியா? என கேள்வியெழுப்பியுள்ள அண்ணாமலை,''சொத்துவரி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது பொய் புகார் தெரிவித்து தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது.மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த சொல்லவே இல்லை. எனவே வரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்''என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்