Skip to main content

இடைதேர்தலால் அதிமுகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!  

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் அடுத்து வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அதிமுக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்  பாராளுமன்றத் தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்ததால், அதை ஈடுகட்ட நாங்குநேரி தொகுதியைக் கேட்டு தலைமையிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க.வின் மனோஜ்பாண்டியன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அதிமுகவை விட திமுக 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற்றால் நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி வாய்ப்பை பெரும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

admk



அதிமுக வாக்கு வங்கி மிக குறைவாக உள்ள நாங்குநேரி தொகுதியில் இப்பொது இருந்தே பூத் ஏஜென்டுகளை நியமிக்க அதிமுக களமிறங்கியுள்ளது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் திமுக வலிமையாக இருப்பதால் பூத் ஏஜென்டுகளை  நியமிப்பதில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் இருக்கும் பெண்களை பூத் ஏஜெண்டுகளாக நியமிக்க பணம் கொடுத்து நியமிக்கும் நிலையில் அதிமுக உள்ளதாக சொல்லப்படுகிறது.  பூத் ஏஜென்டிற்கு ஆள் பிடித்துத் தந்தால் ₹5 ஆயிரம் தருகிறோம் என அதிமுகவினர் கூறியும் பெண்கள் யாரும் தயாராக இல்லை என்பதால் அதிமுக நிலை மோசமாக நாங்குநேரி தொகுதியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்