Skip to main content

திமுகவில் திறமையான நிர்வாகிகள் இல்லாததால்... ராமதாஸ் பேச்சு...

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

 

பாமக வடக்கு மண்டல செயற்குழுக் கூட்டம் சென்னை தி.நகரில் புதன்கிழமை நடந்தது. இதில் அக்கட்சியினர் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

 

 ramadoss



 

அப்போது, பாமக தொடங்கி 32 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஆட்சிக்கு வரவில்லை. 70 முதல் 80 எம்எல்ஏக்கள் பெற்றால் இந்த முறை நாம் ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. பாமக ஆட்சி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் கட்சியில் ஒதுங்கி கொள்ளுங்கள்.
 

திமுகவினரிடம் திறமையான நிர்வாகிகள் இல்லை. திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் ரூபாய் 400 கோடி செலவு செய்து பீகாரில் இருந்து ஒருவரை இறக்கியுள்ளனர். திமுகவின் அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது. கார்ப்பரேட்டால்தான் நமக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


 

திறமை உள்ள பாமக நிர்வாகிகள் கடினமாக உழைத்தால் தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் 3வது இடத்தில் உள்ள பாமக முதலிடத்திற்கு வர வேண்டும். 2021ல் பாமக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பாமக நிர்வாகிகளுக்கு தணிக்கை கூட்டம் நடத்தப்படும் என்றார். இவ்வாறு பேசினார். 
 


 

சார்ந்த செய்திகள்