இனி வரும் தேர்தலில் முதல் அமைச்சர், அமைச்சர்கள் டெபாசிட் கூட பெற முடியாது என்று செந்தில்பாலாஜி பேசினார்.
ஈரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசியதாக ஆடியோ வெளியானது. அதில் அவர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அவதூறாக பேசி இருக்கிறார். முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கடந்த முறை நடந்தது தான் கடைசி தேர்தல். இனிவரும் தேர்தலில் அவர்கள் நிற்க மாட்டார்கள். அப்படியே போட்டியிட்டாலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது. இதை அறிந்து அவர்களே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள். இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது அமைச்சர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி என்றார்.